தமிழகத்துடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில், பாம்பன் கடலுக்கு நடுவே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரும்பு ரயில் பாலம் உள்ளது.
இதன் வழியாக ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் பாம்பன் கடலுக்கு நடுவே மேலும் ஒரு புதிய ரயில் பாலம் கட்டுவது என்று தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பாம்பன் பழைய பாலத்தின் நடுவே உள்ள தூக்கு பாலம், இரண்டாகப் பிரிந்து மேலே எழும்பும் தன்மை உடையது. இதன் வாயிலாக அங்கு கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது.
ஆனால் தற்போது கட்டப்பட்டு வரும் பாம்பன் புதிய பாலத்தின் நடுவே, செங்குத்தாக மேலே எழும்பும் வகையில் லிப்ட் வடிவ தூக்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கடலின் நடுவே பெரிய கப்பல் போக்குவரத்து நடத்த முடியும்.
#IndiaNews
Leave a comment