20220119 151403 scaled
செய்திகள்இலங்கை

யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி!

Share

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம் மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.

கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் நந்தரூபன், யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை வடக்கில் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற தளம் – என்றார்.

இந்த கண்காட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்ஈசிஎஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.

அனைத்து பொதுமக்களையும் கண்காட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மேலும் தகவல் விபரங்களுக்கு www.jitf.lk ஐ பார்வையிடவும் அல்லது 077-1093792 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய ஊடக சந்திப்பின்போது வர்த்தக தொழில்துறை மன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சிக்கான அனுசரணையாளர்களும் இணைந்திருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...