makintha
செய்திகள்இலங்கை

சர்வதேச சைகை மொழி தினம் – பிரதமர் வாழ்த்து!

Share

இன்று சர்வதேச சைகைமொழி தினமாகும். உலகம் முழுவதும் இத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத் தினத்தையொட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ச செவிப்புலனற்றவர்கள் மற்றும் சைகை மொழி பயன்பாட்டளர்களுக்கு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் உள்ள செவிப்புலனற்ற அனைவருக்கும் பிறரைப் போன்று உலகை அறிவதற்கு நாம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செவிப்புலனற்ற நபர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சாதாரணமாக சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வலிமையை ஒரு அரசாங்கமாக நாம் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்போம் என்பதை பிரதமர் இந்நாளில் நினைவூட்டினார்.

சைகை மொழியின் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏனைய மொழிகள் போன்றே சைகை மொழிக்கும் முன்னுரிமை வழங்கி எமது சக குடிமக்களுக்காக தமது கடமைகளை நிறைவேற்றுமாறு பொறுப்புவாய்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் – என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...