இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இம் மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது. அது தொடர்பில் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையில் கூடியது. இதன்போதே ரணில் இவ்வாறு வலியுறுத்தினார்.
” சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் நடத்திய பேச்சு தொடர்பான அறிக்கையை பணிப்பாளர் சபை பெப்ரவரி மூன்றாம் வாரத்தில் வெளியிட இருக்கிறது. எனவே அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து எம்.பிகளுக்கு வழங்குமாறு கோருகிறேன்.
அரசின் நிதி குழுவுக்கும் அது குறித்து கவனம் செலுத்த முடியும்.
இதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ந்து பயனில்லை. அறிக்கை குறித்து ஆராய்ந்து சில விடயங்கள் குறித்து உடன்பாட்டுக்கு வரலாம். பெப்ரவரி மாதம் இது தொடர்பான அறிக்கையை வழங்கினால் மார்சில் அது பற்றி ஆராய முடியும். தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு எங்கிருந்தாவது தீர்வு வழங்க வேண்டும். இங்கு உடன்படும் விடயங்களை ஜனாதிபதிக்கு வழங்கலாம் என்றார்.
#SriLankaNews
Leave a comment