நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் வீட்டின் அருகில் புதைப்பட்ட சிசு ஒன்றின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதமேயான குறை பிரசவத்தில் பிரசவித்த சிசுவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவானின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் திருமணம் செய்யாத 25 வயதுடைய பெண் கருவுற்ற நிலையில் வீட்டாரின் நிர்ப்பந்தத்தில் வீட்டிலேயே கருக்கலைப்பு இடம்பெற்று சிசுவை பிரசவித்துள்ளார்.
குறித்து சிசுவை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். சிசுவின் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகரித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு குறித்த யுவதி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு பொலிஸார் யுவதியின் வாக்குமூலத்தை பதிவுசெய்து நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுசென்றனர்.
இதன்போது நீதிவான் குழந்தையை பிரசவித்த தாய்க்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
Leave a comment