suicide 1
இந்தியாசெய்திகள்

மனைவியைக் கொன்று தானும் உயிரை விட்ட கணவரின் சோகக் கதை

Share

உடல்நலம் குன்றிய மனைவியை சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதால் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவமானது கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் (80), என்பவர் விவசாயி. இவரது மனைவி லீலாம்மா (75), இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் திருமணமாகி வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளாக மனைவி உடல் நலம் குன்றிய நிலையில் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் கணவன் தான் கவனித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தால் மனைவியை சரிவர கவனிக்க ஜோசப்பால் முடியவில்லை.

நேற்று வீட்டுச் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஜோசப் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த பொலிஸார் ஜோசப் உடலை கைப்பற்றிய நிலையில் ஜோசப் மனைவி லீலாம்மா ஒரு அறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

மனைவியைக் கொலை செய்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், என ஜோசப் எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

இதனை ஆதாரமாக வைத்து இரு உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...