இந்தியா- மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இரு தோழிகள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்து ஒன்றாக இருந்தவர்கள் என்பதுடன், ஒன்றாகப் படித்து மருத்துவர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அதீத அன்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
நாக்பூரில் மருத்துவர்களாக பணியாற்றி வந்த இவர்கள், ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
நாங்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதை ஒளிவுமறைவின்றிக் கூறுகிறோம்.
எமது உறவு தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டே எனது தந்தையிடம் சொல்லி விட்டேன். சமீபத்தில்தான் எனது தாயாரிடம் இதை தெரிவித்தேன்.
இதைக் கேட்டு, முதலில் எனது தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பிறகு எனது தந்தை மூலம் அவருக்கு புரிய வைத்தேன். இப்போது அவர்கள் இருவரும் நான் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று எனது திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர் எனக் கூறியுள்ளனர்.
#IndiaNews
Leave a comment