தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆரம்பமானது.
கொவிட்-19 தொற்று வழிமுறைகளுக்கு உட்பட்டு 700 இற்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கயுள்ளன. 300 இற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் சு வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட பலரும் அவனியாபுர ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
#IndiaNews
Leave a comment