CeuS2ao5 Sushant Singh Rajput
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் சாலை விபத்தொன்றில் உயிரிழப்பு!

Share

பீகாரில் நடந்த சாலை விபத்தொன்றில் மறைந்த பாலிவூட் நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் 5 உட்பட 6நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சாலை விபத்து நேற்று காலை பிகார் மாநிலத்தில் லக்கிசாராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹரியான மாநிலத்தில் உள்ள உறவினரொருவரின் மரண வீடொன்றில் இறுதி கிரியைகளில் கலந்துக்கொண்டு  வீடு திரும்பும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹல்சீ பொலிஸ் பிரிவுக்குட்டப்பட்ட நெடுஞ்சாலை ஒன்றிலேயே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. எதிரில் காலி எரிபொருள் நிரப்பு வாகனமொன்றுடன் கார் மோதியதில், சமபவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் சுஷாந்த் சிங்கின் உறவினர்களான லலித் சிங், அவரது மகன்கள் அமித் சேகர், ராம் சந்திர சேகர், மகள் பேபி தேவி, அனிதா தேவி உட்பட அவரது டிரைவர் ஒருவரும் என்று தெரியவருகின்றது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் இறந்து கிடந்தார். முதலில் அது தற்கொலை என்று கூறப்பட்டிருப்பினும் போகப் போக இந்த வழக்கு பல சிக்கல்களை சந்தித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்க்கு இக்கோர விபத்து பாரிய அதிர்ச்சியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Share
தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...