Egg 1
இந்தியாசெய்திகள்

சத்துணவில் பழுதடைந்த முட்டைகள்!!

Share

இந்தியா- தமிழகத்தில் பாடசாலையில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த நாகனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பாடசாலையில், மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனுடைய அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்குள்ள உணவுப் பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளின் தரம் ஆகியவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல நிலையில் உள்ளது என்றும், முட்டைகள் தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் கடந்த வாரம் வாங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் அளிக்காமல், பழுதடைந்த முட்டைகளை பாடசாலையில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாடசாலையின் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையல் பணியாளர் இலட்சுமி மற்றும் பாடசாலைத் தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

06 17
செய்திகள்இந்தியா

வீட்டு வேலைகளைக் கணவனும் பகிர வேண்டும்: விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுரை!

வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்பக்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

17 16
செய்திகள்இந்தியா

விஜய் குறித்து விமர்சனம்: தவெக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது ஜூலி பரபரப்பு புகார்!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர்...