ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

Chennai

இந்தியா- தமிழகம் சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திருவான்மியூர் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியரைக் கட்டிப் போட்டுள்ளனர். அதற்குப் பின்னர் ரூ1.32 இலட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளன்னர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் சிசிடிவி கமெரா இல்லாதமையைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#IndiaNews

Exit mobile version