இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 38 பேருக்கும் ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிசா என மொத்தம் 17 மாநிலங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்றுக்குள்ளான 415 பேரில், 115 பேர் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment