9900 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் ஜெய்தாப்பூரிலேயே 6 அணு உலைகளை அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், ரத்தினகிரி மாவட்டத்தின் ஜெய்தாப்பூரில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் ஒவ்வொன்றும் 1650 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 06 அணு உலைகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக பிரான்ஸ் நாட்டின் இடிஎப் நிறுவனத்துடன் தொழில்நுட்ப, வணிக அடிப்படையிலான பேச்சுக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#IndiaNews
Leave a comment