திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா- சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்காலூர் பகுதியைச் சேர்ந்த நக்சலைட் கம்லு புனம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் நக்சலைட் மங்கி. இருவரும் காதலித்து வந்தனர் எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதற்காக, நக்சலைட் முகாமில் இருந்து குறித்த இருவரும் தப்பியோடியுள்ளனர்.
இருப்பினும், அவர்களை நக்சலைட்டுகள் தேடிக் கண்டுபிடித்து, மக்கள் நீதிமன்றம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, அதற்குப் பின்னர் இருவரும் பொலிஸ் உளவாளிகள் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்ட காதல் ஜோடி, 10 இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.
#IndiaNews
Leave a comment