கேரளாவில் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.
வு
இந்த நிலையில் காணாமல் போனவர்களின் முழு பட்டியலை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜூ தெரிவித்தார்.
கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.
#Kerala #India
Leave a comment