தைப் பூசத்தை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் இடம்பெற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடைபெற்றது.
தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில், ஜோதி சாமியார் மீது கல் உரல் வைத்து அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து மாவாக இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்பு அதனைத் தொடர்ந்து குறித்த சாமியார் மீது காய்ந்த மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் அண்மையில் திருமணமான தம்பதிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
#IndiaNews
Leave a comment