ht4451702524
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகம்!!

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு காலப்பகுதியை விட இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்பவை தொடர்பான முறைப்பாடுகள் அண்மைய நாள்களாக அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம், இராமநாதபுரம், அக்கராயன், ஜெயபுரம், நாச்சிக்குடா, பூநகரி, பளை மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 7 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த துஸ்பிரயோக சம்பவங்களைத் தவிர்த்து, சிறுவர்களைத் துன்புறுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு காயம் விளைவித்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகளும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...