சென்னையில் தொடர்ந்து 2 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
அதன்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இதற்கிடையில் தமிழக அரசின் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Leave a comment