40 இலட்சம் பெறுமதியுடைய இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் மீட்பு!

இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்ளும் கும்பல் ஒன்றினாலேயே இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த பயணிகளை சோதனை இட்டபோதே குறித்த பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள பொருள்கள் 40 லட்சம் சந்தைப் பெறுமதியுடையவை என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிட்ப்பிடத்தக்கது.

Exit mobile version