IMG 20211024 WA0307
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத மண் அகழ்வு – குடாரப்பில் போராட்டம்

Share

மேய்ச்சல் தரைகளும் விவசாய நிலங்களும் களிமண் அகழ்வு மூலம் நாசப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றது.

நாகர்கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாகவும், அனுமதி வழங்கப்பட்டும் மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு மண் அகழ்வு திட்டமிட்ட வகையில் இடம்பெறுகிறது. இது அரச காணிகள் அல்ல. தனியாருக்குச் சொந்தமான தோட்டக்காணிகளாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளிலும் இவ்வாறு களிமண் அகழ்வு இடம்பறுகிறது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளாது மருதங்கேணி பிரதேச செயலாளர் அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும், இதற்கு அரசியல்வாதிகள் சிலரும் உடந்தையாக உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அனுமதிப்பத்திரத்துடன் உழவியந்திரங்களில் களிமண் அகழ்வில் ஈடுபட்டபோது அப்பகுதி மக்கள் தமது எதிர்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்காலிகமாக களிமண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

அப் பகுதியில் களிமண் அகழ்வினால் பாரிய கிடங்குகள் ஏற்பட்டு நீர் தேங்குமிடமாக காணப்படுகிறது. குறித்த பகுதியினை மழை காலங்களில் கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் தரையும் மண் அகழ்வினால் அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்

அத்துடன் இக் காணிகள் பாரியளவில் மண் அகழப்பட்டு அருகில் உள்ள அணைகளால் உவர் நீர் விவசாய நிலங்களுக்குள் உட்புந்து வயல் நிலங்கள் உவராகி வயல் விதைப்புக்களையும் செய்ய முடியாது கைவிட்டுள்ளனர்.

எனவே தமது விவசாய நிலங்களை பாதுகாக்குமாறும், மேய்ச்சல் தரைகளை இல்லாதொழிக்கும் இத் திட்டத்தை உடன் கைவிடுமாறும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

IMG 20211024 WA0346

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...