kumara 1
செய்திகள்இலங்கை

மாகாண தேர்தலை நடத்தினால் பொலிஸ், காணி அதிகாரத்தையும் வழங்க நேரிடும்!

Share

“மாகாண சபை என்பது வெள்ளை யானை. இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்ட அந்த முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் பலரும் கதைக்கின்றனர். அத்தகையதொரு தேர்தல் எமது நாட்டுக்கு அவசியமில்லை. மாகாணசபை என்பது வெள்ளை யானை. அரசியல் வாதிகளை குஷிப்படுத்துவதற்காகவே தேர்தல் நடத்தப்படுகின்றது. அதன்மூலம் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை.

மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்பதால் தற்போது மாகாணசபை இயங்கவில்லையா ? ஆளுநரின்கீழ் நிர்வாகம் நடக்கின்றது. ஜனாதிபதியின் பிரதிநிதியே அவர். மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மாகாணசபைக்கான செலவு குறைவடைந்துள்ளது. நாட்டுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாகாணசபை முறைமை எமக்கு அவசியமில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பொலிஸ், காணி அதிகாரங்களையும் பகிரவேண்டும். தொடர்ந்தும் அவற்றை ஒளித்து வைத்திருக்கமுடியாது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...