பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமது கட்சி வாக்கால்தான் மொட்டு கட்சி வெற்றிபெற்றதென சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துவருகின்றனர். உண்மை அதுவல்ல. மொட்டு கட்சிக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளால்தான் சுதந்திரக்கட்சியினர் கரைசேர்ந்தனர். தனித்து போட்டியிட்டிருந்தால் ஒருவர்கூட நாடாளுமன்றம் வந்திருக்கமுடியாது. இதனை மைத்திரிபால சிறிசேன மறந்துவிட்டார்.
எனவே, சுதந்திரக்கட்சி இல்லை என்பதற்காக மொட்டு கட்சி ஆட்சி கவிழாது.” – என்றார் திஸ்ஸகுட்டியாராச்சி.
#SriLankaNews
Leave a comment