அரச தலைவர் பதவியினை வகிப்பதற்குரிய தகைமை தன்னிடம் இல்லையென்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்.
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மஹிந்த ராஜபக்ஷவின் சகோதாரராக இருப்பதற்கே தகுதியுள்ளதெனக் கூறியுள்ளார். “குடும்ப ஆட்சி எங்கும் உள்ளது. ஆனால், மக்கள் தான் அரசியலுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதில்லை.
இதனைப் படித்த இளைஞர்களால் தான் மாற்றியமைக்க முடியும். இதற்காக கட்சி பேதங்களைத் துறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய முடியாது போகின்ற அரசியல்வாதிகள், பதவியினைத் துறக்கும் நிலையானது இலங்கையில் உருவாக வேண்டும்.
இல்லை என்றால் நாடு இன்னும் பாதாளத்தை நோக்கியே செல்லும்” என எச்சரித்துள்ளார்.
#SrilankaNews

