பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சிங்களமொழிக்கு அச்சுறுத்தலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கலாநிதி ஈ.எம். ரத்னபால எழுதிய ‘சிங்கள பஸ் விமசும’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தற்போது பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விசேட பட்டங்கள் ஆங்கிலத்தில் மாத்திரம் காணப்படுகின்றது.
இது இலங்கையின் பாரம்பரியத்தையும், தேசிய மொழிக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அரங்கில் ஆங்கிலத்தின் அவசியத்தை அங்கீகரிப்பது இன்றியமையாதது.
எனினும், இந்த அனைத்து விடயங்களிலும் எமது மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் வாழும் மொழியாக எமது மொழி பேணப்பட வேண்டும். இல்லாவிடின் ஆபிரிக்காவிலுள்ள சில முக்கிய மொழிகளுக்கு ஏற்பட்ட கதியை சிங்கள மொழியும் சந்திக்க நேரிடும்.
உலகின் பல நாடுகள் தமது நாட்டின் மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்துவது போன்று இலங்கையிலும் உயர்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment