இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும்மழை பெய்துவருவதால் அங்கு பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடும்மழை பெய்துவரும் நிலையில், அங்கு 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களுக்கு, செப்ரெம்பர் 21ஆம் திகதி வரையும் இந்த விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை கேரள மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நீடிக்கும் எனவும், இதனால் அப்பகுதியில் பெருமளவு பாதிப்புக்களுக்கான வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இலட்சத்தீவு கடற்கரை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாலேயே குறித்த மாநிலங்களில் அதிக மழை பெய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும்மழை பெய்துவருவதால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 48 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#india
Leave a comment