20220305 152330 scaled
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

மீனவர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்! – தமிழக முதலமைச்சருக்கு கடிதம்

Share

நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரியும் இழுவைப்படகுகளுக்கு நடவடிக்கை எடுக்ககோரியும் மூன்று மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊடகங்கள் வாயிலாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இவ்விடயத்தை தெரிவித்தனர்.

அந்தக் கடிதத்தில், வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலில் தங்கியிருக்கும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

முப்பது வருடகால யுத்தத்தினால் சொல்லமுடியாத துயரங்களையும் அழிவுகளையும் நாங்கள் சந்தித்திருந்தோம். யுத்தம் காரணமாக வெளி மாவட்டங்களிலும் தென்னிந்தியாவிற்கும் என தொடர்ச்சியான இடப்பெயர்வுகளையும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களையும் சந்தித்திருந்தோம்.

யுத்த காலத்தில் எமது சமூகத்திற்கு அடைக்கலம் தந்தமைக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு முதற்கண் எமது நன்றியினை தெரிவிக்கின்றோம்.

யுத்தத்திற்குப் பின்பு எமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டிபெழுப்ப கடுமையாக முயற்சித்த போதிலும் பல சவால்களையும் தோல்விகளையுமே நாம் சந்திக்க நேர்ந்தது. வருமானத்தின் வீழ்ச்சி மற்றும் பெரும் கடன் சுமை காரணமாக எமது இளந்தலைமுறை கடற்றொழிலையே கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்பான இந்த சமூக பொருளாதார சூழலுக்கான முக்கிய காரணம் தழிழ்நாட்டு இழுவைப்படகுகள்.

இந்த இழுவைப்படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வலைகளை அறுத்துச்செல்வதனால் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் சொத்து இழப்புக்களைத் தவிர்க்க நாம் இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலுக்கு போகாமல் இருப்பதால் பெருமளவான வருமானத்தை இழக்கின்றோம். கடல் வளங்களைச் சுரண்டும் இழுவைமடிகளால் சிறு மீனவர்களின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அழுலைமடி முறையால் வட இலங்கை மற்றும் தமிழ்நாட்டு சிறு கடற்றொழிளர்களின் எதிர்காலமே
அழிக்கப்படுகின்றது.

இந்தப் பிரச்சினை இலங்கை கடற்றொழிலாளருக்கும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளருக்கும் இடையில் இருக்கும் வரலாற்று ரீதியான உறவையே பாதிகின்றது. இழுவைப் படகுகளை முற்றாக நிறுத்துமாறு” இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு மத்தியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை பல பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றபோதிலும், அவற்றின் மூலமாக ஒரு தீர்வையும் எட்டமுடியவில்லை.

உண்மையில் இந்தப்பிரச்சினைக்கான தீர்வு என்பது” இரு நாட்டுக் கடலிலும் இழுவைப்படகு முறையினைத் செய்வதாகும். எனினும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் விருப்பு என்பது இரு நாடுகளின் மத்திய மற்றும் மாநில அரசியல் தலைமைத்துவங்களிடம் இருக்கவில்லை.

முதலமைச்சராக பதிவியேற்ற பின்பு தென்னிந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதி மக்களுக்காக நீங்கள் முன்வைத்த தீர்வுகளை அறிந்த நாம் உங்களுக்கு எமது நன்றிகளை கூறக் கடமைப்பட்டுள்ளோம். உங்களுடைய இவ்வாறான முற்போக்கான பார்வையில் தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால் பாதிக்கப்படும்.

வட இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

அதேவேளை இக்கடித்தில் யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளபோதும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கையொப்பம் இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

20220305 153243 scaled e1646481013922

20220305 153250 scaled e1646481058528

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...