maithripala sirisena 1568543485
செய்திகள்அரசியல்இலங்கை

வர்த்தமானிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை! – மைத்திரி குற்றச்சாட்டு

Share

நல்லாட்சி அரசாங்கத்தில் தான்  ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கையொப்பமிட்ட சில வர்த்தமானி அறிவித்தல்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றநிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எனது ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத வர்த்தமானி அறிவித்தல்களில் பெரும்பாலானவை சூழல் பாதுகாப்பு கருதி வெளியிட்டவையாகும்.  தற்போதைய அரசாங்கம் மண், மணல் கடத்தலுக்கான அனுமதிபத்திரத்தை நீக்கியமை தமக்கு வியப்பளிப்பதாகவும் அவர் கூறினார்

“நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 65 வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிட்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தேன். மின்சார கம்பத்தை பதிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு சிலர் என்னைப் பார்த்து சிரித்தனர் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...