வன்முறைக்கு தயாரான 13 பேர் அடங்கிய கும்பல் ஒன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் தங்கியிருந்த கும்பலே இன்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளது.
கைதான நபர்களிடமிருந்து வாள்கள் 5, மோட்டார் சைக்கிள் செயின்கள் 2, 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள பழமையான வீடு ஒன்றில் தங்கியிருக்கும் குழுவொன்று வன்முறைக்கு தயாராகி வருகிறது என பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட்ட நிலையில், குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment