1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
சர்வதேச நாடுகளுடன் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதில் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் மிக முக்கியம்.
எந்த அரசு வந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படக்கூடாது. அவ்வாறு இன்னும் நடக்கவில்லை. நடந்தால் அது நாட்டுக்கு உகந்த விடயமாக இருக்காது. என இதன்போது தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment