நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நாம் வழங்கியுள்ளோம் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பஸிலுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போதே நிதி அமைச்சருக்கு பின்வரிசை எம்.பிக்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ‘அசிங்கமான அமெரிக்கர்’ என விமல், கம்மன்பில போன்றவர்கள் தன்னை விமர்சிப்பதால் நிதி அமைச்சர் கவலையில் இருக்கின்றார், அதனை நாம் உணர்ந்தோம்.
பஸில் ராஜபக்ச என்பவர் இந்நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்யாத நபர். போர் காலத்தில் பெரும் பங்களிப்பு செய்தவர். எனவே, விமல், கம்மன்பில போன்றவர்களின் அறிவிப்பு எமக்கும் கவலை அளிக்கின்றது.
அப்படியானவர்கள் எமது அமைச்சரவையில் இருந்தது வெட்கப்பட வேண்டிய விடயம்.” – என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி.
#SriLankaNews
Leave a comment