Basil Rajapaksa 1
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு? – பஸில் விளக்கம்

Share

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எண்ணம் தற்போது இல்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரி அடுத்தவாரம் அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதென தகவல் வெளியாகி உள்ளதாகவும் விலை அதிகரிக்க உத்தேசம் உள்ளதா என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும்போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் அது குறித்து மகிழ்ச்சி அடைய முடியாது எனவும் தெரிவித்தார்.

எனினும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்றோ அதிகரிக்கப்படாது என்றோ நிதியமைச்சர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.

அதேவேளை, மத்திய வங்கியால் தொடர்ச்சியாக பணம் அச்சிடப்படுவது தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பட்டது.

” பணம் அச்சிடுவது தற்போதைக்கு நிறுத்தப்படாது, தனது கையெழுத்திட்ட பணம் வெளிவரும் வரை அது தொடரட்டும்.” – எனவும் நகைச்சுவையாக அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...