நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று எரிபொருள் அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் ,எழும் தெரிவிக்கையில்,
எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு தொகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் நாட்டில் எரிபொருளைப் பகிர்ந்தளிப்பதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
வாராவாரம் சனிக்கிழமைகளில் எரிபொருளைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது – என்றார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை நிவர்த்திசெய்வதற்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment