நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி ராகுல்காந்தி 148 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
ராகுலுடன் 300 முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து நடைபயணம் செய்வார்கள். இது தவிர அந்தந்த மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் பாத யாத்திரையில் பங்கெடுப்பார்கள். அவர்கள் மாவட்ட எல்லை வரை உடன் செல்வார்கள். அங்கிருந்து அடுத்த மாவட்ட தொண்டர்கள் வரவேற்று யாத்திரையில் பங்கெடுப்பார்கள். இப்படியே இந்த பாத யாத்திரை காஷ்மீர் வரை நடைபெறுகிறது.
நாள் ஒன்றுக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் தூரம் ராகுல் நடந்து செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment