FB IMG 1642263374280
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முதல் தடவையாக களைகட்டிய கட்டைக்காடு பட்டப்போட்டி!

Share

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முதல் தடவையாக பட்டப்போட்டி இன்று நடத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காட்டிலேயே இப் போட்டிகள் பிறபகல் 4:00 மணிக்கு இடம்பெற்றன.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும் பிரதேசத்திறக்கு வெளியே என இரு பிரிவுகளாக இப் போட்டிகள் இடம்பெற்றன.

அருட்தந்தை வணக்கத்திற்க்குரிய ரமேஷ் அடிகளார் தலைமையில் கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தால் நடாத்தப்பட்ட இப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

போட்டியின் நடுவர்களாக வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி அதிபர் லயன் வே.பரமேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சி.பிரசாத், சமாதான நீதவான் திரு வசந்தகுமார், ஆகியோர் கடமை வகித்தனர்.

இப் போட்டிக்கு வடமராட்சி கிழக்கு, மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு வெளியேயிருந்தும் 30 பட்டங்கள் போட்டியில் பங்கு கொண்டன.

பரிசு தொகையாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட மற்றும் பிரதேசத்திற்க்கு வெளியே இருந்து பங்கு பற்றியவர்களுள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் தெரிவு செய்யப்பட்துடன் 10 ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட்டன.

முதலாம் பரிசாக ரூபா 20000 மும் -இரண்டாம் பரிசாக ரூபா 15000 மும் மூன்றாம் பரிசாக ரூபா 10000மும் வழங்கப்பட்டன.

முதாலமிடத்தினை அன்னப்பட்சி பட்டமும், இரண்டாம் இடத்தினை லிற்றோ காஸ் பட்டமும் மூன்றாம் இடத்தினை சுழலும் பெட்டிப் பட்டமும் பெற்றிருந்தன.

இப் போட்டிகளை கண்டுகளிக்க பல இடங்களிலிருந்தும், சுமார் 5000 பேர் வரை கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1642263314604 20220115 172857 FB IMG 1642266872963 FB IMG 1642266867684

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
rajeshson 1748521947 6838657a8a2b0
சினிமாசெய்திகள்

அப்பாவோட முதல் ஆசை இது தான்..! கதறி அழும் ராஜேஷ் மகன்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி...

25 6837f0f14edd7 6837fc6550cbf
சினிமாசெய்திகள்

சபேசனை வெளியேற்றினால் ஜீ தமிழுக்கு லாபமா? சரிகமப மேடையால் எழும் விவாதங்கள்.!

தமிழ் இசை நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் பெரும் பங்கு வகித்து வருவது...

25 14
இலங்கைசெய்திகள்

நாட்டில் இன்று 50ஆவது துப்பாக்கி சூடு

பாணந்துறையில் இன்று(29.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் நாட்டில் இந்த வருடம் மாத்திரம் 50 துப்பாக்கிச்...

17485380600
சினிமாசெய்திகள்

மூன்று முடிச்சு சீரியல் நடிகைக்கு புற்றுநோய்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மூன்று முடிச்சு’ சீரியலில் அக்கா வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை தீபிகா,...