இந்தியாவில், கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து ஜாம்பவான் ஆன மாரடோனா, பல விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அணிவதில் விருப்பம் கொண்டவர் .
அத்தோடு மாரடோனா பிங் பாங் குரோனோகிராப் என்ற லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரத்தையும் வைத்திருந்தார்.
அவரின் ஓய்வுபெற்ற பிறகு, கடந்த 2010 உதைபந்தாட்ட உலகக் கோப்பையில் கூட அவர் இந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார்.
மாரடோனா மறைவுக்கு பிறகு, துபாயில் இக்கடிகாரம் மிகவும் பாதுக்காப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
இதன் பெறுமதி சுமார் 20 இலட்சம் இந்திய ரூபாகள்.
இந்நிலையில் இக் கைக்கடிகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென திருட்டுப்போனது.
துபாய் காவல்துறையினர் பல கோணங்களில் தேடியும் அது சம்மந்தமாக எந்த தகவலையும் அவர்களால் அறிய முடியவில்லை.
இந்நிலைலையில் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருந்து இக்கடிகாரத்தை மீட்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்த அசாம் காவல்துறை அதிகாரி ,
துபாயிலிருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய நபரின் வீட்டிலிருந்து இந்த கைக்கடிகாரம் மீட்கப்பட்டதாகவும் துபாய் காவல்துறையுடன் இணைந்து அசாம் காவல்துறை செயல்பட்டதாகவும், இது தொடர்பாக வாஜித் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
துபாயில் மாரடோனாவின் உடைமைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தில் வாஜித் ஹுசையன் காவலாளியாக பணியாற்றி வந்தார் எனவும்,
அங்கிருந்து மாரடோனாவின் கைக்கடிகாரத்தை திருடிய வாஜித் ஹுசையன், கடந்த ஆகஸ்ட் மாதம், தனது தந்தைக்கு உடல்நிலை சுகயீனம் என கூறி இந்தியா திரும்பியுள்ளார் எனவும்,
இந்தியா வந்த பிறகு, அவர் மீண்டும் துபாய் செல்லவில்லை எனவும்,
இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை எனவும்,
இன்று அதிகாலை 4 மணியளவில் சிப்சாகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாஜித் ஹுசைனை கைது செய்ததாகவும், அவரிடமிருந்து அக் கடிகாரமும் மீட்கப்பட்டது” எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைத்திருப்பதாக அசாம் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#india
Leave a comment