கொடிகாமத்தில் தேங்கி நிற்கும் வெள்ளம்; நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் சந்தையின் பின்புறமாகவுள்ள வீதி, கனமழை காரணமாக, வெள்ளம் வடிந்தோடாது தேங்கி நிற்கிறது.

இதனால், இந்த வீதியின் மேற்கு மற்றும் வடக்குப் புறமாக பல குடும்பங்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத நிலைமை காணப்படுகிறது.

பாடசாலை செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் போக்குவரத்தில் ஈடுபடமுடியாது பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

Kodikamam03

இந்தநிலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை அப்பகுதிவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த பதினைந்து நாட்களுக்கு மேல் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version