IMG 20220202 WA0007
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்றும் தொடர்கின்றது மீனவர்கள் போராட்டம்!

Share

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதி மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மீனவர்களின் இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புகளும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் நேரடியாக போராட்ட களத்துக்கு வந்து ஆதரவளித்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் முல்லைத்தீவில் இருந்து வருகைதந்து போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தனர்.

இன்று காலை போராட்டகாரர்களுடன் பேசுவதற்காக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படையினர், பொலிஸார் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் வருகைதந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20220202 WA0049 IMG 20220202 WA0041 IMG 20220202 WA0048 IMG 20220202 WA0038 IMG 20220202 WA0037 IMG 20220202 WA0047 IMG 20220202 WA0009 IMG 20220202 WA0055 IMG 20220202 WA0006IMG 20220202 WA0052 IMG 20220202 WA0042 IMG 20220202 WA0046 IMG 20220202 WA0054 IMG 20220202 WA0050 IMG 20220202 WA0043 IMG 20220202 WA0044 IMG 20220202 WA0051

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...