tamilni 106 scaled
இந்தியாசெய்திகள்

ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் இந்திய பெண்

Share

ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் இந்திய பெண்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதன்முறையாக நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் திகதி டுபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏலத்தை எட்மெடாஸ் நடத்தியதோடு இம்முறை ஐபிஎல் ஏலதாரராக பெண் ஒருவரை ஐபிஎல் நிர்வாக குழு நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் ஏலத்தில் நடத்தி வருவதோடு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், ஐபிஎல் ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும் முதல் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி உரையாடல்: ஈரானின் பாராட்டு!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகளுக்கு இடையே பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து, இலங்கையின் வெளிவிவகார...

08 13
செய்திகள்உலகம்

லெபனான் – இஸ்ரேல் போர் பதற்றம்: பாரிஸில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தீவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கும்,...

07 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீட்டுப் பணி உதவியாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது அவதானம்: காவல்துறை விசேட அறிவுறுத்தல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாகப் பதிவாகி வரும் வீடுகளில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, வீட்டுப்...