மஸ்கெலியா , பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது.
தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லையெனவும், அயலவர்கள் கூச்சலிட்டதையடுத்து, ஏனையவர்கள் ஓடி வந்து மற்றயை வீட்டிற்க்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை, இது தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் சம்பவிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.
#SriLankaNews
Leave a comment