எதிர்வரும் வாரம் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு கூட்டமைப்பு கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இதனடிப்படையில், ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை இந்திய உயர்ஸ்தானிகரகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடாத்தியிருந்தன. இந்தநிலையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழு ஒன்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவில் இரா. சம்பந்தனுடன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.
#SrilankaNews
Leave a comment