விபத்தில் காயமடைந்துள்ள பிரபல பாடகி யொஹானி!

New Project 20

இசை நிகழ்ச்சிகளுக்காக இந்தியா சென்றுள்ள இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா விபத்தொன்றில் காயமடைந்துள்ளார்.

இதனைத் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் யொஹானி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, கிடாரின் ஒரு பகுதி முகத்தில் பட்டதால் காயம் ஏற்படடுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹைதராபாத்தில் இடம்பெறவுள்ள இசைக் கச்சேரியில் காயத்தை பொருட்படுத்தாமல் கலந்துகொள்வேன் எனவும் யொஹானி  தெரிவித்துள்ளார்.

Exit mobile version