பேரறிவாளனுக்கு மீண்டும் பிணையை நீடிப்பதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வைகாசி மாதம் 19 திகதி பிணையில் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அவர் தற்பொழுது தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டை உள்ள வீட்டில் தங்கியுள்ளார் .
கடந்த சில மாதங்களாக அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால் வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது .
இந்நிலைமையை கருத்தில் கொண்ட தமிழக அரசு அவருக்கு மேலும் ஒரு மாதம் பிணையை நீடித்துள்ளது.
பேரறிவாளனுக்கு வைகாசி மாதம் தொடக்கம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பிணையை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#india
Leave a comment