நோர்வே – காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நோர்வேயில் காங்ஸ்பெர்க் நகரில் அம்பு மற்றும் வில் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்திற்கு வந்த குறித்த சந்தேக நபர், வில், அம்பு மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை பயன்படுத்தி மக்களைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலா என்பது குறித்தும் தீவிர விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
Leave a comment