துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களுக்கான டொலரை மத்தியவங்கி விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த எரிவாயு இன்று காலை முதல் இறக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் பின்னர் சிலிண்டர்களில் நிரப்பும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த எரிவாயு மூன்று நாட்களுக்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு வார காலமாக எரிவாயுவுடன் குறித்த கப்பல் நங்கூரமிட்டிருந்த நிலையில், நேற்றையதினம் இதற்கான டொலர் மத்தியவங்கியால் செலுத்தப்பட்டது.
இதேவேளை, எரிவாயு நிரப்பிய இன்னும் இரண்டு கப்பல்கள் ஆழ்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான டொலர் இந்த வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
#SriLankaNews

