உலகலாவிய ரீதியில் சற்று அமைதி காத்து வந்த கொரோனாத் தொற்று பரவலானது தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் திரிபானது மிக ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
கொரோனாவின் இன்னொரு திரிபாக கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் பரவலானது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவிலும் சடுதியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகம், மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியவின் அதிக மாநிலங்களில், கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்றையதினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை பாடசாலைகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக மூட மஹாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
#India
Leave a comment