பிறந்த 6 நாள்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட கொரோனா பாதித்த குழந்தை ஒன்றுக்கு விடுதியில் உள்ள தாதியர்கள் இணைந்து காது குத்து விழா நடத்தியுள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருகோணமலை கொரோனா சிகிச்சை விடுதியில் நடைபெற்றுள்ளது.
தாதியர்கள் இந்த செயற்பாடு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவலாகி வருகின்றது.
திருகோணமலையில் சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த இந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதியானது.
இதனால் கடந்த 9 நாள்களாக கந்தளாய் கொரோனா சிகிச்சை விடுதியில் குழந்தை சிகிச்சை பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று 13ஆம் திகதி அக் குழந்தைக்கு பிறந்து 11 மாதம் என மருத்துவமனை அனுமதி அட்டையில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் எடுத்த தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளனர்.
Leave a comment