7d6e44195d787a4c655632ff32ad29e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை சந்தேகநபர்களுக்கு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்பு!!

Share

அக்கரைப்பற்றில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிழக்கு மாகாணத்தில் பல இடற்கயில் தங்காபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் கொள்ளையடித்த தங்காபரணங்களை விற்றுள்ளதுடன், அடகு வைத்து 37 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் 37 பவுண் பெறுமதியான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் தங்காபரணங்களை அடகுவைத்துள்ள நிறுவனங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

03 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இறக்காமத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதியின் பின்னர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...