நடிகர் ஷாருக்கானின் மகன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றில், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மும்பையில் இருந்து, கோவா சென்ற சொகுசு கப்பலில் விருந்தொன்று நடைபெற்றிருந்தது.
குறித்த விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்துவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த கப்பலுக்குச் சாதாரண பயணிகளைப் போல சென்ற போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அங்கு கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியமை தெரியவந்தது.
இதனையடுத்து, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளடங்கலாக, எட்டுப் பேரைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், 3 நாட்களின் பின்னர் அவர்களை மும்பை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இந்நிலையில், குறித்த எட்டுப் பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a comment