உலகளாவிய ரீதியில் கட்டுக்கடங்காது பரவி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மிகப்பெரும் தொற்று கொரோனா.
உலகெங்கிலும் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. வீதிகள் தோறும் பிணங்கள் தேங்கிக்கிடந்தன.
இந்த கொரோனாத் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் மிகப்பெரும் தாண்டவமாடியது.
இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லாத நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றையதினமே கொரோனா நோயாளிகள் இல்லாத நாளாக அமைந்துள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நாள் மிக மகிழ்ச்சியான நாள். இந்த நிலையை எட்டுவதற்கு நாம் கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. அனைவரதும் கடுமையான உழைப்பும் கூட்டு முயற்சியுமே இதற்கான மிகப்பெரும் காரணமாகும்.
கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கினோம். கொரோனா நோயாளிகள் ஒருபுறம், அவர்களது உறவினர்கள் ஒருபுறம். இந்த இரண்டு தரப்பினரையும் சமாளிக்க மிகப்பெரும் சிரமப்பட வேண்டி இருந்தது.
எமது கடின உழைப்புக்கும் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றியே இதுவாகும் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
#IndiaNews