gover
செய்திகள்அரசியல்இலங்கை

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளாதீர்! – அரசு பணிப்புரை

Share

எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசு பணிப்புரை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி செயலாளரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் நிதி அமைச்சரின் உரை இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பாகும்.

இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். (அமைச்சுகளுக்கான நிதி ஓதுக்கீடு). டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

எனவே, பட்ஜட் கூட்டத்தொடரின்போது சிலவேளை அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிரணி வாக்கெடுப்பை கோரும், மேலும் சில தரப்புகள் யோசனைகளை முன்வைப்பார்கள். இவை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கும், எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் தோற்கடிக்காமல் இருப்பதற்காகவுமே அமைச்சர்களுக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேவைகள் இருப்பின் அது தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...

29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...